Tuesday, July 28, 2009

எங்கள் தேசம் எங்களை நம்பி

பல்லவி
எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது
இழந்த நிலத்தில் கனவுகள் புதைந்து கிடக்கிறது
இனிவருவது இளையோர் காலம்
அவர் தோள்களில்எங்கள் தேசம்
இனிவருவது இளையோர் காலம்
அவர் தோள்களில்எங்கள் தேசம்

இந்த உலகம் முழுவதும்
உன் குரல் ஒலிக்கட்டுமே..
இனி விழிகளை மூடிய
உலகம் விழிக்கட்டுமே..

இந்த உலகம் முழுவதும்
உன் குரல் ஒலிக்கட்டுமே..
இனி விழிகளை மூடிய
உலகம் விழிக்கட்டுமே..

எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது
இழந்த நிலத்தில் கனவுகள் புதைந்து கிடக்கிறது

சரணம் -1
நெருப்பில் கரைந்த தேசம்
எங்கள் உயிரின் கருவாகும்
எம் அன்னையர் பூமியை
உரிமை கோரிட எவனுக்கும் உரிமையில்லை!

போரில் வீழ்ந்த முகங்கள்
எங்கள் தேசத்தின் வரமாகும்
வந்தேறிய குடிகள் எம்மை
ஆழ்வதை இனியும் ஏற்பதில்லை!

தாய்மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்கள்
மின்சார வேலிக்குள்ளே கருகுதடா
தாய்மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்கள்
மின்சார வேலிக்குள்ளே கருகுதடா

வானம் நெருப்பினை வீச..
காட்டில் உறவுகள் வாட..
ஈழத்தமிழன் வாழ்வு எரியுதடா!

எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது
இழந்த நிலத்தில் கனவுகள் புதைந்து கிடக்கிறது

சரணம் - 2
முடிந்தது போர் என்று நினைத்தால்
அது அவர்களின் தவறாகும்..
அறிவாயுதம் ஏந்தி தினம் தினம்
உழைப்பது எங்கள் பொறுப்பாகும்

ஒற்றுமை இழந்ததினாலே இங்கு
எத்தனை அவலங்கள்..
ஒரு குடையின் கீழ் நாம் இணைந்தாலே
இனி பறந்திடும் துயரங்கள்

போராட்ட வடிவங்கள்
எத்தனை என்றாலும்..

உலகெல்லாம் ஒன்றாகிப் போராடு

போராட்ட வடிவங்கள்
எத்தனை என்றாலும்..

உலகெல்லாம் ஒன்றாகிப் போராடு

இனவெறிக் கூட்டங்கள் ஓட..
அன்னை மண்ணும் மீள..
எங்கள் சூரியன் மீண்டும் உதிக்கட்டுமே!

பல்லவி நிறைவு

எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது
இழந்த நிலத்தில் கனவுகள் புதைந்து கிடக்கிறது
இனிவருவது இளையோர் காலம்..
அவர் தோள்களில் எங்கள் தேசம்..
இனிவருவது இளையோர் காலம்..
அவர் தோள்களில் எங்கள் தேசம்..

இந்த உலகம் முழுவதும்
உன் குரல் ஒலிக்கட்டுமே..
இனி விழிகளை மூடிய
உலகம் விழிக்கட்டுமே..

இந்த உலகம் முழுவதும்
உன் குரல் ஒலிக்கட்டுமே..
இனி விழிகளை மூடிய
உலகம் விழிக்கட்டுமே.

குரல் : வாணன்
இசை : சமீரன்
பாடல் : வசீகரன்
Banner: VN Music Dreams

VOICE: VANAN
MUSIC BY: SAMEERAN
LYRICS: VASEEHARAN

தமிழர் அலையென எழுந்தனர் பார்

பல்லவி

தமிழர் அலையென எழுந்தனர் பார்
தேம்ஸ் நதிக்கரை அதிருது பார்
உலகம் முழுவதும் தமிழர் இணைந்தனர்
உணர்வின் எழுச்சி இதுதான்
கனடா நோர்வே பாரிஸ் லண்டன்
தமிழகம் பொங்கி எழுந்தது பார்
உலகே உலகே போரை நிறுத்து-தமிழன்
வேரை அறுக்கும் போரை நிறுத்து

சரணம்-1
விழித்திடு விழித்திடு உலகத் தமிழா
நாங்கள் வீழ்வது சரியா?
இலங்கை என்ற காடு பிளந்து
தமிழீழம் காண்பது பிழையா?

நாற்பத்தியெட்டில் வாங்கிய சுதந்திரம்
ஈழத் தமிழன் பெற்ற தரித்திரம்
கற்கண்டு பூமி நெருப்பில் குளிக்க
உலகம் ஊமையாய் இருப்பது விசித்திரம்

எழுவோம் ....எழுவோம் - இனிவரும்
தடைகள் உடைப்போம்
உலகத் தமிழினம் இணைந்தது என்று
எதிரி படைக்குச் சொல்வோம்

சரணம்-2
இனிமேல் இனிமேல் ஓய்வுகளில்லை
அலைகடல் என்று திரள்வோம்
வன்னிப் போரில் வாடும் தமிழனை
எங்கள் தோள்களில் சுமப்போம்

மடிந்து மடிந்து மண்ணாய்ப் போகினும்
தமிழ் ஈழ விடியலை மறப்போமா?
கொத்தணிக் குண்டுகள் மண்டையைப் பிளப்பினும்
எங்கள் உயிர் மானத்தை இழப்போமா?

எழுவோம்....எழுவோம் - இனிவரும்
தடைகள் உடைப்போம்
முத்துக்குமார் ஏற்றிய நெருப்பினிலே
அக்கினிக் குஞ்சாய் பிறப்போம்

வசீகரன்
நோர்வே
08.02.09