Thursday, April 26, 2007

எழுது எழுது



எழுது எழுது என் அன்பே - காதல் கடிதம்

பல்லவி

எழுது எழுது என் அன்பே-ஒரு
கடிதம் எழுது என் அன்பே
உன்னை நான் நேசிக்கிறேன்
அதனால் தானே சுவாசிக்கிறேன்

சரணம் 1

பனியில் உறையும் என் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் உனைப்பார்த்து
பாசம் நேசம் தருவாயே-என்பாதை
எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என்
பார்வை நீயேன் வரவில்லை ?
அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி
மழையாக என்னை வந்து நனைப்பாயா?

சரணம் 2

மனசில் பூக்கும் என் பூக்கள்- உன்
மாலை ஆகும் வேளை வரும்
பூவின் வாசம் தருவாயே - என்
மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு
எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு
இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என்
உயிரோடும் உடலோடும் நீதானே- உன்
உறவாலே எனை வந்த தாலாட்டு

காதல் வாழ்க காதல் வாழ்க
பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை
காதல் வாழ்க காதல் வாழ்க

பாடல் : வசீகரன்
குரல் : ஸ்ரீநிவாஸ்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 01
ஏட்டில் : 20.03.2000

காதல் கடிதம்

3 comments:

கானா பிரபா said...

வலைப்பூ உலகத்தில் உங்களை வரவேற்கிறேன் நண்பரே, தொடரட்டும்.

வசீகரன் said...

அன்புள்ள நண்பன்,

கானா பிரபாவிற்கு எனது நன்றிகள். என்னை வலைப்பூவில் வரவேற்கின்ற நல்ல நண்பர் என்ற வகையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் விடுமுறையில் இருந்ததால் என்னால் உடனடியாக பதிலைப் பதிவு செய்யமுடியவில்லை மன்னித்தருளுக.:)

என்றும் அன்புடன்
வசீகரன்

HK Arun said...

இன்று தான் இந்த வலைத்தளத்தை காணக்கிடைத்தது.

மிகவும் சிறப்பான வரிகள்.

நன்றி!