Monday, November 26, 2007
தமிழன் தமிழன் ஒருவன்
பல்லவி
தமிழன் தமிழன் ஒருவன்
தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள்
தலைவன் தலைவன் மறவன்
தமிழர் படைத்த பிரமன்- அண்ணன்
பிரபா பிரபா பிரபாகரன்
பிரபா பிரபா பிரபாகரன்
சரணம் 1
தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக்
கனவோடு முளைத்த நனவுஇவன்
அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள்
அன்பை மதிக்கின்ற தலைவன்இவன்
பகலில் அண்ணன் சூரியனே
இரவில் அண்ணன் சந்திரனே
சரணம் 2
பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும்
பண்டார வன்னியனின் ஆசியிருக்கும்
பாயும் விழிகளிலே தீயிருக்கும்
படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும்
பகலில் அண்ணன் சூரியனே
இரவில் அண்ணன் சந்திரனே
சரணம் 3
நாட்டை நம்மை நேசிப்பவன்
தமிழ்விடுதலையை என்றும் யாசிப்பவன்
போரிலே செந்தமிழைப் பேசுபவன்- அவன்
போதனையில் புத்தனையே மிஞ்சுகின்றவன்
பகலில் அண்ணன் சூரியனே
இரவில் அண்ணன் சந்திரனே
பாடல்: தமிழன்(நோர்வே)
குரல்: திருமலைச்சந்திரன்
இசை: விமலன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள்ஆக்கங்கள் ஏன் தமிழ் மணத்தில் தெரிவதில்லை
நன்றி மாயா. உங்களுடைய அன்புக் கோரிக்கைக்கும், ஆதங்கத்தும்.
எப்படி இணைப்பது என்ற விபரங்களை அறியத்தருவீர்களா..?
Post a Comment